உழவர்!
- Nanda Rajarajan
- May 24, 2021
- 1 min read
நிலமெல்லாம் கொடுத்தேனடா,
நெல் மணி காணத் தவித்தேனடா,
உழவர் கை படாமலே,
வயல் உயிர் பிரிந்து துடித்தேனடா!
உலகெல்லாம் எப்பொழுதும்,
ஊண் தவறாமல் மகிழ்ந்தாரடா,
இனி உணவின்றி காலம் கழிந்தோடிடும்,
என புரியாது புறக்கணித்தாரடா!
கால் இரண்டும் சகதியைத் தொடாமலே,
விரல் ஊண் தொட முடியாதடா,
இதை மறவாது தினந்தோறும்,
உன் கடமையை தவறாதேடா!

Comentários