என் அவள்!
- Nanda Rajarajan
- Sep 10, 2021
- 1 min read
நகராத நேரம் சிலையாக மாறும்,
இவள் நாவின் இசைத் தொடரவே!
இவள் குரலோடு ஒரு குயில் பாட்டுப் பாட,
மனம் ஆசை பெருகவே!
இதழ் இரண்டும் அசைகின்ற அழகோ,
ஒரு குழந்தையின் மழலையே!
இவள் விழியில் என் முகம் விழுக,
இவள் வெட்கம் மலரவே!
எதிர்பாரா நல் தருணங்கள்,
இவளோடு நான் காண,
மனம் இரண்டும் ஒன்றாகி,
இடைவெளி இரு துண்டாகும்!
இருள் இவளை பயமுறுத்த,
வான் மதி திரண்டு ஒளி அனுப்பும்,
இவள் உறங்கும் வரை அது விழித்திருந்து,
பெண் இமைகளைத் தட்டி எழுப்பும்!

Comentários