என்றும் உன்னுடன் நான்!
- Nanda Rajarajan
- May 9, 2021
- 1 min read
Updated: May 24, 2021
இவள் விழி இரண்டின் வழியே,
இவள் இதயம் நுழைந்தேன்,
இதயத்தில் இடம் ஒன்று தேடி,
இரவு முழுதும் அலைந்தேன்!
உறக்கங்கள் தொலைத்தபடி சிலையாக நின்றேன்,
ஒரு நொடி இவள் பார்வை பட என்னையே மறந்தேன்!
தலையணையை புறம் தள்ளி இவள் மடியில் சாய்ந்தேன்,
கனவிலும் இவள் குரல் கேட்டு உறக்கத்தில் சிரித்தேன்!
வான் மழை மண் தரை தொடவே,
என் உடல் அனல் கொஞ்சம் தனியும்,
கண் இமை இரண்டும் மூடிய படியே,
பல கடிதங்கள் எழுதும்!
எதுவும் இடையில் வராமல் இருந்திட,
இப்புவி பார்த்து கொள்ளும்,
நம் இருவரின் அழகை ரசித்திட,
நிரல் அனைத்தையும் அது ஒதுக்கி விடும்!

Comentarios