கடலோர கவிதை!
- Nanda Rajarajan
- Dec 28, 2021
- 1 min read
ஓயாத அலை ஒரு பக்கம் இசை பாட,
ஓடாத மனமும் இதைக் கண்டு அலைபாயும்!
துணையின்றி நிற்கும் என் இரு கால்களை இவன் அணைத்திட,
உடல் சிலையாக மாறி சில நொடியில் கரைந்தோடும்!
நான் பின் சென்று அழைத்தால், இவன் முன் வந்து நிற்பான்,
இவனை பின் தொடர்ந்து சென்றால், சிறு தூரம் செல்வான்!
அலையோடு விளையாடும் சில நேரம் ஒரு மோகம்,
மனம் அழகான நினைவினை கடத்திச் செல்லும்!
வயதொன்றும் அறியாமல் இவன் நம்மோடு உறவாட,
நமக்குத் தெரியாமல் நம் சுமைகளை இவன் எடுத்துச் செல்வான்!

コメント