கனவைத் துரத்தி காதல் செய்!
- Nanda Rajarajan
- Sep 10, 2021
- 0 min read
Updated: Sep 16, 2021
வானம் ஒன்றும் தூரம் இல்லை,
உன் வாழ்க்கை போகும் போக்கில் செல்,
சிகப்பு கம்பளம் விரித்து நிற்கும்!
நீ வாழும் நாட்கள் உன் கைகள் உள்ளே,
பறந்துசெல், பல கதைகள் எதிரே நிற்கும்!
தடைகள் எல்லாம் உடைத்துச் செல்,
உன் கனவே உம்மை தொடர்ந்து துரத்தும்!
கண் உறங்காமல் களைத்துப் போகும்,
மனம் உனக்காக விழித்திருக்கும்!
கடல், மலை, காடு உதவி வரும்,
உன் ஒருவனுக்கே வழி வகுக்கும்!
செம்மொழி கூட காத்திருக்கும்,
உன் இலக்கை அடை, அது கவி பாடும்!

Comments