சொல்லாத காதல்!
- Nanda Rajarajan
- Dec 28, 2021
- 1 min read
இவளைக் கண்டவுடன் உணரவில்லை எவ்வித மாயம்,
இவளுடன் கடந்த பின் வாழ்வே வர்ணஜாலம்!
புதியதாய் உருவெடுத்தது நட்பின் ஆழம்,
புது புது அர்த்தங்கள் என் நெஞ்சின் ஓரம்!
குழந்தை போலே இவள் மனம் இருக்கும்,
கொஞ்சிவிட என் கைகள் துடிக்கும்!
இமைகள் மூடாமல் சண்டைப் போடும்,
இவளின் பார்வைத் தேடி ஊர்வலம் போகும்!
இவள் குணம் யாவிலும் கண்ணியம் தோன்றும்,
மறுபடி என் இதயம் இவளுக்குள் விழும்!
தேடிய பெண் கண்முன் இருக்க,
மூடிய கதவுகள் ஓராயிரம் தடுக்கும்!
மறு பிறவி பிறக்கும்,
என் கைகள் இவள் கைகளைப் பிடிக்கும்!
சொல்லாத காதல்....சில சமயம் சுகம் கொடுக்கும்!

Comments