நட்புடன் இவளும் நானும்!
- Nanda Rajarajan
- Dec 28, 2021
- 1 min read
ஒரு மாலை பொழுது புது ஓசை கேட்கவே,
செவி யார் என்று தேடிச் சென்றது!
குழல் போலே இவள் குரல் பாடவே,
உடல் திகைத்து நின்றது!
சிறு நேரம் இவளைக் கண்ட கண்களும்,
உடனே காதல் கொண்டது!
மறுபடி இவளைக் காண மனம் காரணம் தேடவே,
தினம் தினம் இவள் நியாபகம் பூர்த்தது!
இவளைக் கண்டு திரும்பிய பின்னே,
மனம் உண்மை அறிந்தது!
நான் காணும் வெற்றியை இவள் போற்றவே,
இவள் காணும் வெற்றியை மனம் ரசித்தது!
நான் பேசும் வாத்தையை இவள் விரும்பவே,
இவளோடு இருக்க இதயம் துடித்தது!
இருவர் மனமும் இங்கு ஒன்றாய் இணைந்திட,
இவள் தோழமை ஒரு சான்றாய் அமைந்தது!
என் தொல்லை சில நேரம் இவளைச் சீண்டும்,
வெறுக்காமல் இவள் மனம் பதில் கூறும்!
நான் வருந்தாமல் இருந்திட இவள் மனம் கலைத்துப் போகும்,
இவள் மீதுள்ள அன்போ பெரு வெள்ளம் ஆகும்!
சிறு கீறல் படாமல் இருந்திட இவள் நட்பு பெரிதாய் தோன்றும்,
என்றென்றும் தோழனாக இருக்க என் மனம் ஏங்கும்!
பயணம் தொடரும்....

Comments